மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி


மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 4 March 2019 3:45 AM IST (Updated: 4 March 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அடுத்த நாலூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் 2 பேர் பலியாகினர்.

மீஞ்சூர்,

விழுப்புரத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 26). மீஞ்சூர் அடுத்த மணலிபுதுநகர் அருகே வெள்ளவாயில் கிராமத்தில் தங்கி செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பரை சந்தித்துவிட்டு திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் நாலூர் ஏரிக்கரை நோக்கி வந்தார்.

அப்போது அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த மொய்தீன் (36) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்குநேர் மோதி கொண்டன. இதில் சதீஷ், மொய்தீன் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்த மீஞ்சூர் போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மீஞ்சூர் அடுத்த வழுதிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் ரவி (58). திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நாலூர் கிராமம் அருகே மோட்டார் சைக்கிளில் பொன்னேரி சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மீஞ்சூர் போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story