ஊராட்சி பெண் செயலாளரிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகளுக்கு வலைவீச்சு
நன்னிலம் அருகே ஸ்கூட்டரில் சென்ற ஊராட்சி பெண் செயலாளரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் 3 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள பாக்கம்கோட்டூரை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி விமலா(வயது36). இவர் திருப்பயத்தாங்குடி ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் ஸ்கூட்டரில் திருவாரூருக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். கங்களாஞ்சேரி அருகே இவர் சென்று கொண்டிருந்த போது பின்புறம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் விமலாவின் கழுத்தில் கிடந்த 3 பவுன் சங்கிலியை திடீரென பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமலா இது குறித்து நன்னிலம் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற ஆசாமிகளை தேடி வருகிறார்கள். ஸ்கூட்டரில் சென்ற ஊராட்சி பெண் செயலாளரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமிகள் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story