கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ஜ.க.வினர் இருசக்கர வாகன ஊர்வலம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது.
ஓசூர்,
நாட்டிலுள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் “வேண்டும் மோடி, மீண்டும் மோடி” என்ற கோஷத்தை முன்வைத்து பா.ஜ.க. சார்பில், இருசக்கர வாகன ஊர்வலம் ஓசூரில் நடைபெற்றது. ஓசூரில், பழைய கிருஷ்ணகிரி சாலையில் உள்ள பண்ட ஆஞ்சநேயர் கோவில் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் முனிராஜூ தலைமை தாங்கினார். கோட்ட பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ராஜி, மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் கொடியசைத்து இருசக்கர வாகன ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
இதில், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் பாலசந்திரன், மாவட்ட துணைத் தலைவர் போத்திராஜ், நகர செயலாளர் ராகவேந்திரா, நகர பொதுச்செயலாளர்கள் கிரிஷ்குமார், தங்கராஜ் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம், பேரண்டபள்ளி, தொரப்பள்ளி, ஒன்னல்வாடி, ஜொனபண்டா, கெலமங்கலம் ரோடு, மத்திகிரி கூட்டு ரோடு, தின்னூர். ஓசூர் எம்.ஜி.ரோடு, ராம்நகர் வழியாக சென்று தர்கா அருகேயுள்ள கிருஷ்ணா நகரில் நிறைவடைந்தது.
தேன்கனிக்கோட்டையில் பா.ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகன ஊர்வலத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நரசிம்மன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட இளைஞர் அணி மாவட்ட பொதுச் செயலாளர் பிரபு, மாவட்ட செயலாளர் நாராயணன் நிர்வாகிகள் வெங்கட்ராஜ், சீனிவாசன், சந்தோஷ்குமார், பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலம் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக தளி, மதகொண்டப்பள்ளி, பஞ்சேஸ்வரம், கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
ஊத்தங்கரையில் நடைபெற்ற இருசக்கர வாகன ஊர்வலத்திற்கு பா.ஜ.க. மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார், ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பிரசார அணி துணை தலைவர் ஜெயராமன், மாவட்ட துணை தலைவர் வெங்கடாசலம், நகர தலைவர் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா மற்றும் நிர்வாகிகள் விஜயசேகர், சிங்காரவேலன் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சிங்காரப்பேட்டை, மத்தூர் ஆகிய பகுதிகளில் ஊர்வலமாக சென்று பிரதமர் நரேந்திரமோடி அரசின் 5 ஆண்டு கால சாதனைகள் குறித்து பொதுமக்களுக்கு கட்சி நிர்வாகிகள் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
Related Tags :
Next Story