5 ஆண்டு சாதனைகளை விளக்கி பா.ஜனதாவினர் மோட்டார்சைக்கிள் ஊர்வலம்


5 ஆண்டு சாதனைகளை விளக்கி பா.ஜனதாவினர் மோட்டார்சைக்கிள் ஊர்வலம்
x
தினத்தந்தி 3 March 2019 10:30 PM GMT (Updated: 2019-03-04T01:32:12+05:30)

மத்திய அரசின் 5 ஆண்டு சாதனைகளை விளக்கி பா.ஜனதாவினர் மோட்டார்சைக்கிள்களில் ஊர்வலமாக சென்றனர்.

நாமக்கல்,

பா.ஜனதா இளைஞர் அணி சார்பில் நாமக்கல்லில் மத்திய அரசின் 5 ஆண்டு கால சாதனைகளை விளக்கி மோட்டார்சைக்கிள் ஊர்வலம் நடத்தப்பட்டது. நாமக்கல் பூங்கா சாலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் திருச்சி சாலை, பரமத்தி சாலை வழியாக சென்று மீண்டும் பூங்கா சாலையில் முடிவடைந்தது.

இந்த ஊர்வலத்துக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் நாமக்கல் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் முத்துகுமார், பொறுப்பாளர் காந்தி, மாநில செயற்குழு உறுப்பினர் தமிழரசி யோகம், நகர தலைவர் வரதராஜூ, மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் நரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. அரசின் 5 ஆண்டுகள் சாதனைகளை பொதுமக்களிடையே விளக்கும் வகையில் பா.ஜனதாவினர் மோட்டார்சைக்கிள் ஊர்வலம் நடத்தினார்கள். ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவர் கோவிந்தராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாமக்கல் நாடாளுமன்ற பொறுப்பாளர் ஏழுமலை, செயற்குழு உறுப்பினர் மனோகர், கட்சியின் மூத்த நிர்வாகி டி.எஸ்.மாணிக்கம், நகர தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆண்டகளூர்கேட்டில் முடிவடைந்தது. இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோட்டில் பா.ஜனதா சார்பில் 5 ஆண்டு சாதனைகளை விளக்கி மோட்டார்சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதற்கு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ராமசந்திரன், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மதியரசு ஆகியோர் தலைமை தாங்கினர். நகர இளைஞர் அணி தலைவர் வெங்கடேஷ் ஜம்பு, ஒன்றிய இளைஞர் அணி தலைவர் அஜித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாமக்கல் நாடாளுமன்ற பொறுப்பாளரும், கோட்ட பொறுப்பாளருமான ஏ.சி.முருகேசன் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

திருச்செங்கோடு கோர்ட்டு அருகில் தொடங்கிய இந்த ஊர்வலம் அண்ணா சிலை, ஈரோடு ரோடு, கவுண்டம்பாளையம், கூட்டப்பள்ளி வழியாக வந்து வரகூராம்பட்டியில் முடிவடைந்தது. இதில் திருச்செங்கோடு சட்டமன்ற அமைப்பாளர் தாமரைக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ், மாவட்ட செயலாளர் மதியழகன்,நகர தலைவர் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரமத்திவேலூரில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞர் அணி சார்பில் நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் கவுதம் தலைமையில் மாவட்ட செயலாளர் காந்தி முன்னிலையில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் பாண்டமங்கலத்தில் இருந்து தொடங்கி வேலூர் வழியாக சென்று பரமத்தியில் நிறைவு பெற்றது.

Next Story