மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கான விலையில்லா புத்தக பை- காலணிகள் + "||" + Bookless shoes for pupils

மாணவர்களுக்கான விலையில்லா புத்தக பை- காலணிகள்

மாணவர்களுக்கான விலையில்லா புத்தக பை- காலணிகள்
மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா காலணிகள் 23 ஆயிரத்து 782 எண்ணிக்கையில் லாரி மூலம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்தன.
புதுக்கோட்டை,

தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் இருந்து 2018-19-ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா புத்தக பை 22 ஆயிரத்து 500 எண்ணிக்கைகள் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக விலையில்லா காலணிகள் 23 ஆயிரத்து 782 எண்ணிக்கையில் லாரி மூலம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு வந்தன. இவைகள் லாரியில் இருந்து இறக்கி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் இவைகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது.