‘அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இடம்பெறும்’ அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி


‘அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இடம்பெறும்’ அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 4 March 2019 4:30 AM IST (Updated: 4 March 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. நிச்சயம் இடம்பெறும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் ராஜீவ்காந்தி நகரில் வருவாய்த்துறையின் சார்பில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்பில் 86 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினார். அதனை தொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரவக்குறிச்சி தும்பிவாடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பரின் மனைவி சுதா என்வருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையினையும், 44 பயனாளிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், சிறு தேவாலங்கள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் திறந்த வேதாகம் தேவசபை தேவாலயத்திற்கு ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான காசோலையையும் அமைச்சர் வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, தனித்துணை கலெக்டர் (சமூகப்பாதுகாப்புத்திட்டம்) மீனாட்சி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர்கள் ரவிக்குமார், செந்தில், மண்டல துணை வட்டாட்சியர் குமரேசன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி பகுதிகளில் சாலை மேம்பாடு, பேவர் பிளாக் சாலைகள் அமைத்தல், குடிநீர் குழாய்கள் விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு புதிய பணிகளுக்கு பூமி பூஜையிட்டு அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில்,தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வெற்றிக் கூட்டணியை தான் அமைத்துள்ளார்கள். இதில் தே.மு.தி.க. நிச்சயம் இடம்பெற வாய்ப்புள்ளது. நாற் பதும் நமதே என்று கூறிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம், எப்படியாவது குறிப்பிட்ட இடங்களில் ஜெயித்தால் போதும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க. தலைமையில் அமைத்த கூட்டணியை பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள். வறுமை கோட்டிற்கு கீழ் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.2 ஆயிரம் வழங்கப்படும், என்றார். 

Next Story