கரூர் மாவட்டத்தில் குரூப்-1 முதல்நிலை தேர்வை 2,006 பேர் எழுதினர்
கரூர் மாவட்டத்தில் குரூப்-1 முதல் நிலை தேர்வை 2,006 பேர் எழுதினர்.
கரூர்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில், கரூர் மாவட்டத்தில் குரூப்-1 முதல்நிலை தேர்வு 9 மையங்களில் நேற்று நடந்தது. இதில் செட்டிநாடு பொறியியல் கல்லூரி தேர்வுமையத்தை மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் குரூப்-1-க்கான முதல்நிலைத்தேர்வானது கரூர் மாவட்டத்தில் ரெட்டிப்பாளையம் கரூர் தொழில்நுட்பக்கல்லுாரி, தாந்தோன்றிமலை அரசுக்கல்லுாரி, வெண்ணமலை கொங்கு கலை அறிவியல் கல்லுாரி, தளவாப்பாளையம் எம்.குமாரசாமி கல்லுாரி(இரண்டு மையங்கள்) என்பன உள்ளிட்ட மொத்தம் 9 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வினை எழுதுவதற்கு 2,664 பேர் விண்ணப்பித்து தகுதி பெற்றிருந்தனர்.
இதில் 2,006 பேர் பங்கேற்று தேர்வெழுதியுள்ளனர். 658 பேர் தேர்வு எழுத வரவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் நியமிக்கப் பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story