குறிஞ்சிப்பாடி அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


குறிஞ்சிப்பாடி அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 March 2019 3:58 AM IST (Updated: 4 March 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டது.

குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி அருகே ரோட்டுபொட்டவெளி கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் மணிகண்டன் (வயது 32), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி கல்யாணி (25). இவர்களுக்கு அஜய் (4), ஆகாஷ் (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக மணிகண்டன் தனது குடும்பத்துடன் சென்னையில் தங்கி, வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு கல்யாணி தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு சிதம்பரம் அருகே உள்ள கீழ்பருத்திக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.

இதனால் மனமுடைந்த மணிகண்டன், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சொந்த ஊரான ரோட்டுபொட்டவெளிக்கு வந்தார். அங்கு தனது வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் வீட்டில் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் கல்யாணிக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனே வீட்டிற்கு விரைந்து வந்து, கதவை திறக்க முயன்றார். ஆனால் அந்த கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதையடுத்து கல்யாணி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மணிகண்டன் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.

இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் குறிஞ்சிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story