தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சுருக்கமாக டி.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது.
டி.ஆர்.பி. அமைப்பு தமிழக அரசு பள்ளிகளில் ஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் அமைப்பாக செயல்படுகிறது. தற்போது 2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை இந்த அமைப்பு வெளியிட்டு உள்ளது. காலிப் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த தேர்வின் மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையான ஆசிரியர் பணிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும், 6 முதல் 8-ம் வகுப்பு வரையான ஆசிரியர் பணிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எதிர்கொள்ளலாம். இவர்கள் 5-ம் வகுப்புவரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்பு பெறலாம்.
6 முதல் 8-ம் வகுப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப்படிப்புடன், 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.
விருப்பம் உள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப்பதிவு 15-3-2019-ந் தேதி தொடங்குகிறது. வருகிற ஏப்ரல் 5-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய கூடுதல் விவரங்களை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story