நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு 425 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு 425 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 4 March 2019 10:00 PM GMT (Updated: 4 March 2019 5:09 PM GMT)

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் சரிவடைந்து 425 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 435 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 425 காசுகளாக சரிவடைந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:-

சென்னை-460, ஐதராபாத்-400, விஜயவாடா, தனுகு-422, பார்வாலா-396, மும்பை-460, மைசூரு-452, பெங்களூரு-435, கொல்கத்தா-474, டெல்லி-427.

கறிக்கோழி கிலோ ரூ.65-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.59-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், முட்டை நுகர்வு பொதுமக்கள் இடையே குறைந்து வருகிறது. அதை கருத்தில் கொண்டும், பிற மண்டலங்களில் முட்டை கொள்முதல் விலை குறைந்து வருவதால் அதற்கு தகுந்தாற்போலும் நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணை யாளர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல் மண்டலத்தில் 6 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 40 காசுகள் குறைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

Next Story