ஜெயலலிதா பிறந்த நாள் விழா: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்


ஜெயலலிதா பிறந்த நாள் விழா: ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 4 March 2019 10:30 PM GMT (Updated: 4 March 2019 5:26 PM GMT)

ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது.

உத்திரமேரூர்,

உத்திரமேரூரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. விழாவுக்கு காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமை தாங்கினார்.

அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டு ஏழை, எளிய மக்களுக்கு இலவச சைக்கிள், தையல் எந்திரம், சலவைப்பெட்டி மற்றும் வேட்டி சேலைகளை வழங்கி பேசினார்.

உத்திரமேரூர் முன்னாள் தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன், ஒன்றிய செயலாளர் கே.பிரகாஷ்பாபு, மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கங்காதரன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தங்க பஞ்சாட்சரம், நகர செயலாளர் லட்சுமணன், மாவட்ட இளைஞரணி பொருளாளர் கே.ஜெயவிஷ்ணு, பேரவை இணைச்செயலாளர் துரைபாபு, மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு துணை செயலாளர் சர்தார்கான், பேரூராட்சி துணை செயலாளர் பொன்னுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி முன்னிலையில், தி.மு.க., அ.ம.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Next Story