வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் வழக்குகளில் சிக்கிய மோட்டார் சைக்கிள்களை குவித்து வைத்திருக்கும் அவலம்
வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் வழக்குகளில் சிக்கிய மோட்டார் சைக்கிள்களை குப்பை போல குவித்து வைத்துள்ளனர்.
வாலாஜாபாத்,
வாலாஜாபாத் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குற்றங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும், பொதுமக்களின் உடைமைகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் காஞ்சீபுரம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வாலாஜாபாத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட எல்லைப்பகுதியில் உள்ள சாலைகளில் விபத்துக்களில் சிக்கியும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்கள் வழக்கு முடியும் வரை போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைப்பது வழக்கம். வழக்கு முடிந்த பின்னர் பொதுமக்கள் தங்களின் வாகனங் களை எடுத்துச்செல்வார்கள்.
இந்தநிலையில் பொதுமக்களின் வாகனங்கள் உரிய பாதுகாப்போடு நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர்் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்படும். ஆனால் வாலாஜாபாத் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களின்் நிலையோ பரிதாபமாக உள்ளது.
பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வாங்கிய வாகனங்கள் விபத்தில் சிக்கியிருந்தாலும் தற்போது அவை குப்பைகள் போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. மேலும் அந்த இருசக்கர வாகனங்களை மீண்டும் பயன்படுத்தவே முடியாத அளவிற்கு மண்ணோடு மண்ணாக போடப்பட்டுள்ளது.
வாலாஜாபாத் போலீசாரின் அலட்சியப்போக்கால் பொது மக்களின் வாகனங்களை குவியலாக குவித்து குப்பைகள் போல் போட்டு வைத்து மண்ணோடு மண்ணாக்குவது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது என சமூக ஆர்்வலர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

Related Tags :
Next Story