மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி நெல் காயவைக்கும் பணியில் ஈடுபட்ட போது பரிதாபம்
முத்துப்பேட்டை அருகே நெல் காயவைக்கும் பணியில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நம்மகுறிச்சி பெத்த வேளாண்மை கோட்டத்தை சேர்ந்தவர் முருகையன்(வயது40). விவசாயி. இவர் முத்துப்பேட்டை அருகே கோவிலூரில் கிழக்கு கடற்கரை சாலையில் நெல்லை காயவைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அமர்நாத்(26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக முருகையன் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
மேலும், இந்த விபத்தில் காயம் அடைந்த அமர்நாத் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story