பெல்தங்கடி அருகே மைனர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி ரியல்எஸ்டேட் அதிபர் கைது


பெல்தங்கடி அருகே மைனர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி ரியல்எஸ்டேட் அதிபர் கைது
x
தினத்தந்தி 5 March 2019 4:00 AM IST (Updated: 5 March 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

பெல்தங்கடி அருகே மைனர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மங்களூரு, 

தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா டெங்கன்னந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் ஆச்சாரி (வயது 43). ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். அதே பகுதியை சேர்ந்த ஒரு மைனர் பெண்ணின் தந்தைக்கு நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இதை அறிந்த சதீஷ் ஆச்சாரி, அந்த மைனர் பெண்ணின் தந்தைக்கு நிலப்பிரச்சினையை தீர்த்துவைப்பதாக கூறி, நட்புடன் பழகி வந்துள்ளார்.

இதனால் சதீஷ் ஆச்சாரி, அடிக்கடி மைனர் பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அதுபோல் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ந்தேதி அவர் மைனர் பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மைனர் பெண் மட்டும் தனியாக இருந்துள்ளார்.

அந்த சமயத்தில் சதீஷ் ஆச்சாரி, அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். மேலும் சம்பவம் பற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் அவர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் சம்பவம் பற்றி மைனர் பெண் யாரிடமும் கூறவில்லை.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 21-ந்தேதி அந்த மைனர் ெபண், துருவனக் கெரேயில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் ஆச்சாரி, மைனர் பெண்ணை ஆட்டோவில் அழைத்துச் சென்று மீண்டும் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காப்பாற்றும் படி சத்தம் போட்டார்.

இதைதொடர்ந்து மைனர் பெண்ணை பாதி வழியில் இறக்கிவிட்டு ஆட்டோவில் சதீஷ் ஆச்சாரி தப்பி சென்று விட்டார். இதுகுறித்து மைனர் பெண் கொடுத்த புகாரின் பேரில் பெல்தங்கடி போலீசார் சதீஷ் ஆச்சாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அவர் தலைமறைவானார். இதனால் அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சதீஷ் ஆச்சாரியாவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story