கிர்காவில் தியேட்டர் மேலாளருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது


கிர்காவில் தியேட்டர் மேலாளருக்கு கத்திக்குத்து; 2 பேர் கைது
x
தினத்தந்தி 4 March 2019 10:30 PM GMT (Updated: 2019-03-05T01:12:44+05:30)

தியேட்டர் மேலாளரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

மும்பை கிர்காவில் உள்ள ஒரு தியேட்டரில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் லீவிஸ் பெர்னாண்டஸ்(வயது45). சம்பவத்தன்று இவர் பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி ஒருவர் திடீரென அவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு ஓடிவிட்டார். இதில், படுகாயம் அடைந்த லீவிஸ் பெர்னாண்டஸ் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 28 தையல்கள் போடப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து வி.பி.ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, தியேட்டருக்கு வெளியே பிளாக்கில் டிக்கெட் விற்று வந்த இஸ்மாயில் சவ்(வயது54) என்பவரை கண்டித்ததால், அவர் பிரேம் சிங்(35) என்பவர் மூலம் லீவிஸ் பெர்னாண்டசை கொலை செய்ய முயற்சி செய்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பைகுல்லா பகுதியில் பதுங்கி இருந்த இஸ்மாயில் சவ், பிரேம் சிங் இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு அவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

Next Story