குடிநீர் தட்டுப்பாடு: தண்ணீர் லாரிகள் பற்றாக்குறையால் புலம்பும் பொது மக்கள் கூடுதல் விலைக்கு பெறுவதாக குற்றச்சாட்டு
சென்னை நகரில் மிரட்டி வரும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாகவும், தண்ணீர் லாரிகள் பற்றாக்குறையாலும் சென்னை நகர மக்கள் புலம்பி வருகிறார்கள். கூடுதல் விலைக்கு லாரி தண்ணீரை பெறுவதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சென்னை,
சென்னை நகரை தண்ணீர் தட்டுப்பாடு என்ற பிரச்சினை கொஞ்சம், கொஞ்சமாக மிரட்டி வருகிறது. ஏற்கனவே பருவமழை பொய்த்து போனதால் சென்னை ஏரிகளில் நீர் நிரம்பவில்லை. இந்தநிலையில் கோடை காலத்தை சமாளிக்க கல் குவாரிகளில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வரப்படுகிறது.
சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யும் பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் பணிகள் வேகமெடுத்து உள்ளன. ஆனால் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதிலும் சில குளறுபடி ஏற்படுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்து வருகின்றன.
குடிநீர் லாரிகளின் சேவையை முறைப்படுத்தும் வகையில் குடிநீர் வாரியம் சார்பில் தனி செயலி ஏற்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலம் விண்ணப்பிப்போருக்கு மட்டுமே லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் வாரியத்தின் மூலம் இயங்கும் 654 லாரிகளும் இந்த செயலி மூலமே சேவைக்கு ஈடுபடுத்தப்படுகின்றன.
இதில் 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 429 லாரிகளும், 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 225 லாரிகளும் அடங்கும். 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் லாரிக்கு ரூ.700-ம், 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் லாரிக்கு ரூ.475-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முன்பதிவு இல்லாமல் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வது சட்டவிரோதம் என்றே கருதப்படுகிறது. அப்படி முறைகேட்டில் ஈடுபடும் டிரைவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை நகரில் பெரும்பாலான வீடுகளில் உள்ள குடிநீர் தொட்டிகள் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவையே. எனவே பெரும்பாலானோர் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளையே முன்பதிவு செய்கின்றனர். இதனால் இந்த 225 லாரிகளுக்கும் கடும் கிராக்கி ஏற்படுகிறது.
இதையடுத்து இந்த வகை லாரிகளுக்காக முன்பதிவு செய்து காத்துக்கிடக்க வேண்டிய நிலைமை பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. எனவே வேறு வழியின்றி 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளை தேர்வு செய்கின்றனர். அந்த லாரிகளில் முன்பதிவு கிடைத்து விடுகிறது. பின்னர் அந்த லாரிகளின் டிரைவர்கள் குறிப்பிட்ட வீடுகளுக்கு வந்து தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி ரூ.700 கட்டணத்தை பெற்றுக்கொள்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் ரூ.700 கட்டணத்தில் 9 ஆயிரம் லிட்டர் நீருக்கு முன்பதிவு செய்தாலும், 6 ஆயிரம் லிட்டர் தண்ணீரே பெற்றுக்கொள்ள முடிகிறது. இதையடுத்து மீதமுள்ள தண்ணீர் அதே லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், “தண்ணீர் கண்டிப்பாக தேவை என்பதால் வேறுவழியின்றி 9 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளில் முன்பதிவு செய்துவிடுகிறோம். ரூ.700 கட்டணத்தை செலுத்திவிட்டு 6 ஆயிரம் லிட்டர் தண்ணீரே பெறமுடிகிறது. மீதமுள்ள நீரை அருகில் உள்ள வீடுகளுக்கு வழங்க கேட்டாலும் டிரைவர் மறுத்துவிடுகிறார்.
மீதமுள்ள நீரை அப்படியே டிரைவர்கள் எடுத்து சென்றுவிடுகின்றனர். அந்த நீரை முறையாக வாரியத்திடம் ஒப்படைக்கிறார்களா? அல்லது வேறு வீடுகளுக்கு விற்று விடுகிறார்களா? என்பது குழப்பமாக இருக்கிறது. எனவே 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளை கூடுதலாக இயக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர்.

Related Tags :
Next Story