பயிர் இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்


பயிர் இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 March 2019 4:10 AM IST (Updated: 5 March 2019 4:10 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் காப்பீடு நிறுவனம் மற்றும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் சார்பில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொண்டி,

திருவாடானை தாலுகா மங்களக்குடி அருகேயுள்ள ஆண்டாவூரணி கிராமத்தில் கடந்த 2017–18–ம் ஆண்டிற்கு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் காப்பீடு நிறுவனம் மற்றும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து உடனடியாக வழங்க வலியுறுத்தியும், அங்குள்ள சந்தை அருகில் விவசாயிகள் சார்பில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடந்தது.

 முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் தலைமை தாங்கினார்.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குழந்தைச்சாமி,ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் ஆண்டாவூரணி கிராமத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமான விவசாயிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதேபோல இப் பகுதியில் உள்ள பனிச்சகுடி, ஆண்டாவூரணி விலக்குசாலை,கட்ட விளாகம்,அறநூற்றிவயல்,அந்திவயல்,கூகுடி,பாகனூர், பேராமங்கலம் உள்பட பல்வேறு கிராமங்களில் 2017–18–ம் ஆண்டிற்கு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் காப்பீடு நிறுவனம் மற்றும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் உடனடியாக வழங்க வலியுறுத்தியும் விவசாயிகள் சார்பில் கருப்பு கொடிஏற்றப்பட்டது.


Next Story