திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் தயார் நிலையில் 300 புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்


திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் தயார் நிலையில் 300 புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
x
தினத்தந்தி 4 March 2019 11:04 PM GMT (Updated: 4 March 2019 11:04 PM GMT)

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் 300 புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

திருப்பரங்குன்றம்,

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று பெங்களூருவில் இருந்து லாரிகள் மூலம் 300 புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது.இதனையடுத்து புதிய மின்னணு எந்திரங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களை கொண்டு 15 வரிசையாக மாதிரி சின்னங்களை அதி£ரிகள் உருவாக்கினர். மேலும் 16–வது வரிசையாக நோட்டாவையும் தயார் செய்தனர். இந்த பணியில் பெங்களூருவை சேர்ந்த 15 என்ஜீனியர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தங்கு தடை இன்றி 16 பட்டன்களும் செயல்படுகிறதா என்று ஒவ்வொரு பட்டனாக அழுத்தி சரிபார்க்கப்பட்டது. பச்சை மற்றும் சிவப்பு பல்புகள் எரிகிறதா என்று பரிசோதனை செய்தனர்.

இந்த பணியில் திருப்பரங்குன்றம் தாலுகாவில் உள்ள 17 கிராம நிர்வாக அலுவலர்கள், தலையாரிகள், உதவியாளர்கள் 75–க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பின்னர் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் ஒரு பெரிய அறையில் பாதுகாப்பாக 300 வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. அதனை மதுரை மாவட்ட வருவாய் கோட்டாசியர் முருகானந்தம், தாசில்தார்கள் சுரேஷ், நாகராஜ், தேர்தல் பிரிவு மண்டல துணை தாசில்தார் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை உறுதி செய்யும் நவீன எந்திரம் மக்கள் பார்வைக்கப்பட்டு ஒத்திகை நடத்தது.


Next Story