கலபுரகியில் பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகை
பிரதமர் மோடி இன்று(புதன்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் கலபுரகியில் நடைபெறும் பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். அதோடு இ.எஸ்.ஐ. மருத்துவமனையையும் தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தல் காலஅட்டவணை இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் பிரசாரம்
இந்தியா முழுவதும் மார்ச் மாத இறுதியில் தொடங்கி மே மாதம் முதல் வாரம் வரை பல கட்டங்களாக தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்டார்.
அவர் கடந்த பிப்ரவரி மாதம் தார்வாரில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த நிலையில் மோடி இன்று (புதன் கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் கலபுரகியில் நடைபெறும் கட்சி ெபாதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் பீதர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கலபுரகிக்கு வருகிறார். பிரதமர் வருவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி முன்னிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள உமேஷ்ஜாதவ் பா.ஜனதாவில் சேருகிறார். அவர் கலபுரகி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள, நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை எதிர்த்து பா.ஜனதா வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.
இ.எஸ்.ஐ. மருத்துவமனை
பா.ஜனதா கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு, பிரதமர் மோடி, பெங்களூருவில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் கல்லூரியை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
மேலும் பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மாணவமாணவிகளுக்காக தங்கும் விடுதி, பெங்களூருவில் வருமான வரி தீர்ப்பாயத்தையும் தொடங்கி வைக்கிறார். ‘ஆயுஸ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனடைந்த பயனாளிகளுடனும் மோடி கலந்துரையாடுகிறார்.
Related Tags :
Next Story