முதியவரிடம் ரூ.13 கோடி நகை, பணம் அபேஸ் கணக்காளர் உள்பட 2 பேருக்கு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு


முதியவரிடம் ரூ.13 கோடி நகை, பணம் அபேஸ் கணக்காளர் உள்பட 2 பேருக்கு ஜெயில் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 March 2019 4:15 AM IST (Updated: 6 March 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

முதியவரிடம் ரூ.13 கோடி அபேஸ் செய்த கணக்காளர் உள்பட 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

முதியவரிடம் ரூ.13 கோடி அபேஸ் செய்த கணக்காளர் உள்பட 2 பேருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது.

சகோதரர்கள்

மும்பை கிராண்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷாபன் (வயது85). இவர் சர்ச்கேட்டில் உள்ள சகோதரர் ரம்ஜான் என்பவருடன் வசித்து வந்தார். கடந்த 2015-ம் ஆண்டு ரம்ஜான் உயிரிழந்து விட்டார்.

இந்தநிலையில், அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகள் காணாமல் போயிருந்தது. மேலும் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.11 கோடி மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாபன் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

2 ஆண்டு சிறை

அவரது மனுவை விசாரித்த கோர்ட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஆசாத் மைதான் போலீசாருக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ரம்ஜான் வீட்டில் கணக்காளராக வேலை பார்த்த மினியூசுப் பட்டேல் (37) மற்றும் பெகராம் (60) ஆகியோர் சேர்ந்து வீட்டில் நகைகளை திருடியதுடன், அவரது வங்கிக்கணக்கில் இருந்த பணத்தையும் தங்களது வங்கி கணக்குக்கு மாற்றியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில் இருவர் மீதான குற்றச்சாட்டும் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய செசன்ஸ் கோர்ட்டு, குற்றவாளிகள் இருவருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Next Story