சேலத்தில், அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை


சேலத்தில், அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை
x
தினத்தந்தி 6 March 2019 3:30 AM IST (Updated: 6 March 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம், 

சேலம் மாசிநாயக்கன்பட்டி, முத்துசாமி நகரை சேர்ந்தவர் விசுவநாதன். சேலத்தில் அரசு பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மெயின்ரோடு, கங்கைகொண்ட சோழபுரத்தை சேர்ந்த புஷ்பலதா (வயது 30)வுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

புஷ்பலதா சேலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த புஷ்பலதா கணவரிடம் கோபித்துக்கொண்டு வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று திடீரென்று தூக்கு போட்டுக்கொண்டார். இதில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பலதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் விசுவநாதனுக்கும், புஷ்பலதாவின் பெற்றோருக்கும் இடையே பணம், கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து உள்ளது.

சம்பவத்தன்று, இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனவேதனை அடைந்த புஷ்பலதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இருப்பினும் வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் செழியன் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story