வானவில் : கீ போர்டு மொபைல் போன்


வானவில் :  கீ போர்டு மொபைல் போன்
x
தினத்தந்தி 6 March 2019 8:48 AM GMT (Updated: 2019-03-06T14:18:23+05:30)

நாம் எவ்வளவுதான் ஸ்மார்ட்போனுக்கு மாறினாலும், வேகமாக தகவல்களைப் பரிமாறிக் கொள்ள கீ போர்டு அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் கீ போர்டுடன் கூடிய மொபைல் போனாகும்.

ஜெமினி பி.டி.ஏ. (பெர்சனல் டிஜிட்டல் அசிஸ்ட் என்பதன் சுருக்கமே பி.டி.ஏ. என்பதாகும்) மொபைல் போனை பிளானெட் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது மடக்கும் வகையிலான ஒரு பக்கம் திரையும் மறுபுறம் கீ போர்டும் ஏறக்குறைய லேப்டாப்பைப் போல உருவாக்கப்பட்டுள்ளது. 4 ஜி செயல்பாடு வை-பை இணைப்பு ஆகியவை இதிலும் உண்டு. சிம் கார்டு மற்றும் மைக்ரோ எஸ்.டி. கார்டு வசதியும் உள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. லைனக்ஸ், மைக்ரோசாப்ட் வேர்டு உள்ளிட்ட மென்பொருள் இருப்பதால் அவை சார்ந்த பணிகளையும் நிறைவேற்ற முடியும். கீ போர்டில் உள்ள பட்டன்கள் விரல்கள் பதிந்து பயன்படுத்தும் வகையில் இருப்பது இதன் சிறப்பம்சம்.

இதனால் விரைவாக பணிகளை மேற்கொள்ள முடியும். வழக்கமான தொடு திரையில் உள்ள டேப்லெட் போன்றவற்றை செயல்படுத்துவதை விட 80 சதவீதம் விரைவாக இதில் செயல்படுத்த முடியும். இதன் திரை 6 அங்குலம் இருப்பதால் பணிகளை செயல்படுத்துவதில் சிரமம் இருக்காது. இதில் வீடியோ அழைப்புகளை மேற்கொள்வதும் எளிது.

இதில் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. ஆனால் எடை மட்டும் சற்று அதிகம் (320 கிராம்). அதேபோல இதில் முன்புற கேமரா கிடையாது. இது செல்பி பிரியர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விஷயம். இருபுறத்திலும் மைக் மற்றும் ஸ்பீக்கர் உள்ளன. அத்துடன் வாய்ஸ் அசிஸ்ட் வசதியும் இதில் உள்ளது கூடுதல் சாதகமாகும். அழைப்புகள் வரும்போது இதை பிரயோகிக்கலாம். இதன் விலை ரூ.56,000ஆகும். 

Next Story