பல முறை பயன்படுத்தக்கூடிய லைட்டர்
நெருப்பு பொறியை உருவாக்கும் லைட்டர்கள் சிகரெட் பற்ற வைப்பதற்கு மட்டும் பயன்படுவதில்லை.
சில நேரங்களில் மெழுகுவர்த்தி ஏற்றவும், சுற்றுலா சென்றிருக்கும்போது நெருப்பு மூட்டவும் கூட பயன்படும். இவை பெரும்பாலும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களால் செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறையும் ஒரு லைட்டர் எரியும் போதும் அதனுள் இருக்கும் திரவத்தின் மூலமே அது பற்றவைக்கப்படுகிறது.
ஆனால் இந்த பிளாஸ்மாட்டிக் எக்ஸ் எனப்படும் லைட்டர் இரண்டு ஊதா நிறதிர்களின் மூலம் எக்ஸ் எழுத்தின் வடிவத்தில் தீப்பொறியை வெளியிடுகிறது. இந்த லைட்டரை யு.எஸ்.பி. சார்ஜர் கொண்டு ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் நூறு பொறிகளை இதிலிருந்து பெறலாம். இதை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள ஸ்லிம்மான உடையாத உறை இத்துடன் இணைப்பாக வருகிறது. பல வடிவங்களில் கிடைக்கும் இந்த லைட்டரின் விலை 50 அமெரிக்க டாலர்கள்.
Related Tags :
Next Story