காற்றில் மிதக்கும் பல்பு
மேஜிக் நிபுணர்கள் காற்றில் பொருட்களை மிதக்க விட்டு நம்மை ஆச்சரியப்படுத்துவதுண்டு.
எந்த நிபுணரும் இன்றியே நம்மை வியக்க வைக்கிறது இந்த பிளைட் பல்பு. இந்த மிதக்கும் பல்பு, காற்றின் மூலம் மின்காந்தத் தூண்டல் ஏற்பட்டு செயல்படுகிறது. இதன் ஆயுட்காலம் ஐம்பதாயிரம் மணி நேரங்கள். அதாவது ஒரு பல்பு பதினோரு வருடங்களுக்கு நீடித்து உழைக்கும். இதன் கீழுள்ள பாகம் ஓக் மரத்தில் செய்யப்பட்டுள்ளது. பல்பின் அடிப்பகுதி தங்க வண்ண கோட்டிங் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த பல்பு பார்ப்பதற்கு பழங்காலத்து விளக்கைப் போன்று தோற்றமளிக்கிறது. இது எல்லா நாடுகளிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. வலது புறத்தின் ஒரு ஓரம் சுவிட்ச் போன்று செயல்படுகிறது. அதாவது இந்த இடத்தில் தொட்டு ஆப் மற்றும் ஆன் செய்யலாம். இதன் விலை 349 அமெரிக்க டாலர்கள்.
Related Tags :
Next Story