5 கேமராக்களுடன் நோக்கியா பியூர் வியூ
நோக்கியா போன்களைத் தயாரிக்க உரிமம் பெற்றுள்ள ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் முதல் முறையாக 5 கேமராக்களைக் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு நோக்கியா 9 பியூர் வியூ என பெயர் சூட்டியுள்ளது.
நோக்கியா 9 பியூர் வியூ விலை 699 டாலர் (சுமார் ரூ. 54 ஆயிரம்). பார்சிலோனாவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் இம்மாதம் விற்பனைக்கு வரும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் ஒவ்வொன்றும் 12 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட 5 கேமராக்கள் பின்பகுதியில் உள்ளது சிறப்பம்சமாகும். இந்த ஸ்மார்ட்போன் அடுத்த தலைமுறை புரோ கேமரா செயலியுடன் வெளிவந்துள்ளது. இது 5.99 அங்குல கியூ.ஹெச்.டி. போலெட் திரையைக் கொண்டது. இதில் 6000 வகை அலுமினியம் மற்றும் எண் 5 கொரில்லா கிளாஸ் தொடு திரைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 845 பிராசஸர் உள்ளது. இதனால் இது விரைவாக வயர்லெஸ் முறையிலும் சார்ஜ் ஆகும்.
Related Tags :
Next Story