டி.சி.எல்.லின் டிராகன் ஹின்ஜ்


டி.சி.எல்.லின் டிராகன் ஹின்ஜ்
x
தினத்தந்தி 6 March 2019 9:59 AM GMT (Updated: 6 March 2019 9:59 AM GMT)

டி.சி.எல். நிறுவனம் காப்புரிமை பெற்ற டிராகன் ஹின்ஜ் தொழில் நுட்பத்தைக் கொண்ட மடக்கும் ஸ்மார்ட்போனை காட்சிப்படுத்தியுள்ளது.

இதிலும் அமோலெட் பேனல் உள்ளது. இதை தேவைக்கு தகுந்தபடி மடக்கிக் கொள்ள முடிவது சிறப்பம்சமாகும். இதில் டிராகன் ஹின்ஜ் தொழில்நுட்பம் இருப்பதால் இடத்திற்கேற்ப படங்கள் தெரியும் வகையில் இது செயல்படும். இத்தகைய தொழில்நுட்பத்தில் மடக்கும் வகையில் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். டி.சி.எல். நிறுவனம் ஏற்கனவே பிளாக்பெர்ரி மற்றும் அல்காடெல் பிராண்டுகளுக்கு இத்தகைய தொழில்நுட்பத்திலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து தந்துள்ளது. டிராகன் ஹின்ஜ் தொழில்நுட்பமானது ஸ்மார்ட்போனில் படங்கள் மிகச் சிறப்பாக தெரிவதற்கு வழிவகுப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற விவரத்தை வெளியிடவில்லை.

Next Story