வானவில் : ஸ்மார்ட் காபி மக்
இது ஸ்மார்ட் யுகம். இதில் ஸ்மார்ட்டாக இல்லையெனில் பின்தங்க வேண்டியதுதான். அந்த வகையில் இப்போது வந்துள்ளது ஸ்மார்ட் காபி மக்.
இது வழக்கமான பீங்கான் அல்லது செராமிக்கால் ஆன கோப்பை போன்ற தோற்றத்துடன் உள்ளது. ஆனால் இது நீங்கள் குடிக்கும் காபி, டீ உள்ளிட்டவற்றின் சூட்டின் அளவை நிர்ணயிக்கிறது. நீங்கள் சாப்பிடும் சூட்டிற்கு வந்தவுடன் அதுகுறித்த தகவல் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வந்துவிடும். அதேபோல உங்கள் ஸ்மார்ட்போன் மூலமே உங்களுக்குத் தேவையான வெப்ப நிலையை மாற்றி அமைக்க முடியும். ஒவ்வொரு பானத்தையும் எந்த வெப்ப நிலையில் சாப்பிட விரும்புகிறீர்கள் என்பதை முன்கூட்டியே இதில் தீர்மானித்து வைத்துவிட்டால் அந்த சூடான பதம் வந்தவுடன் ஸ்மார்ட்போனுக்கு தகவல் வந்துவிடும். அமெரிக்காவில் அறிமுகமான இந்த தயாரிப்பை இந்தியாவில் அமேசான் மூலம் வாங்கலாம். விலை ரூ.10,089.
Related Tags :
Next Story