வானவில் : அதிக சேமிப்பு இடம் தரும் பென் டிரைவ்
நமது எல்லா விதமான ஆவணங்கள், பாடல்கள், படங்கள் என்று எல்லாவற்றையும் சேமித்து வைக்க உதவுபவை பென் டிரைவ்கள். இவை வழக்கமாக எம்.பி (MB) மற்றும் ஜி.பி (GB)அளவுகளில் கிடைக்கும்.
ஆனால் சந்தையில் புதிதாக வந்திருக்கும் இந்த சோமி பிளாஷ் பென் டிரைவில் ஒரு டி.பி. அதாவது 1024 ஜி.பி. அளவுள்ள பைல்களை சேமித்துக் கொள்ளலாம்.
பாக்கெட்டில் வைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு சிறியதாக இருக்கிறது. பேட்டரியில் இயங்கக் கூடிய இந்த டிரைவ்வை ஒரு முறை சார்ஜ் செய்தால் பத்து மணி நேரம் வரை உபயோகிக்கலாம்.
இதனைக் கொண்டு திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை செல்போன் மற்றும் கணினி, டேப்லெட் போன்ற கருவிகளில் ஏற்றிக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் இந்த டிரைவிலிருந்து 12 கருவிகளுக்கு தகவல் பரிமாற்றம் செய்ய முடியும்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆகிய இரு இயங்கு தளங்களிலும் இதை பயன்படுத்தலாம். மேலும் அதிகமான ஆவணங்களை சேமிக்க விரும்பினால் 256 ஜி. பி. அளவுள்ள ஒரு எஸ்.டி. கார்டையும் இணைத்துக் கொள்ளலாம்.
Related Tags :
Next Story