வானவில் : கண்ணாடியில் கேமரா
எத்தனையோ விதமான நவீன கேமராக்களை பார்த்திருப்போம். ஆனால் கண்களில் அணியும் சன் கிளாசில் கேமரா இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
ஆம் இந்த ஸ்னாப் சாட் ஸ்பெக்டக்ல்ஸ் கண்ணாடியின் ஒரு முனையில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
நாம் கண்ணாடியை அணிந்து கொண்டு அப்படியே புகைப்படம் எடுக்க முடியும். தண்ணீரிலும் இயங்கக் கூடிய வாட்டர் புரூப்பாகவும் செயல்படுவதால் நீச்சல் அடித்து கொண்டோ சாகசம் செய்து கொண்டோ போட்டோ எடுக்கலாம்.
இதன் பக்கவாட்டில் இருக்கும் கேமரா சுவிட்சை அழுத்தினால் போட்டோ எடுக்கிறது. முப்பது நொடிகளுக்கு வீடியோவும் இதில் எடுக்க முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் எழுபது வீடியோக்கள் எடுக்கலாம்.
இத்துடன் கொடுக்கப்படும் சார்ஜ் கேசில் நான்கு முறை சார்ஜ் செய்து கொள்ளலாம். வயர்லெசாக சார்ஜ் செய்து கொள்கிறது. இதில் எடுக்கும் புகைப்படங்களை ஸ்னாப்ச்சாட் செயலி மூலம் நண்பர்களுக்கும் பகிரலாம். ஐந்து அழகிய வண்ணங்களில் கிடைக்கும் இந்த கலக்கல் கண்ணாடியின் விலை ரூ.10,500.
Related Tags :
Next Story