சூளகிரி அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதி


சூளகிரி அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதி
x
தினத்தந்தி 6 March 2019 10:30 PM GMT (Updated: 6 March 2019 7:21 PM GMT)

சூளகிரி அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது கொழுமூர் கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 6 மாதங்களாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

அங்குள்ள கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் ஆழ்துளை குழாய் பழுதடைந்துவிட்டது. ஆனால், அந்த ஆழ்துளை குழாய் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால், கிராம மக்கள் நீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.

மேலும் பொதுமக்கள் பலரும் வெகு தூரம் நடந்து சென்று அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் தண்ணீரை எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில் லை என்று கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலைமை தொடர்ந்தால், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

Next Story