கோவிலுக்கு வந்த பக்தர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடிய ஆட்டோ டிரைவர் திருட்டு மொபட்டை மகள் ஓட்டி சென்றதால் சிக்கினார்
மணலியில் கோவிலுக்கு வந்த பக்தர்களின் மோட்டார் சைக்கிள்களை திருடியதாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். திருட்டு மொபட்டை அவரது மகள் ஓட்டி சென்றதால் அவர் சிக்கியுள்ளார்.
திருவொற்றியூர்,
மணலி பாரதியார் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மணலி அரிகிருஷ்ணபுரம் சிவன் கோவிலில் நடந்த மயான கொள்ளை திருவிழாவில் கலந்து கொள்ள தனது மொபட்டில் சென்றார்.
கோவில் அருகே மொபட்டை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை. யாரோ திருடிச்சென்று விட்டனர். அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
அப்போது கார்த்திக்கின் மொபட்டை ஒரு சிறுமி ஓட்டி வந்தாள். உடனே ஓடிச்சென்று அந்த சிறுமியை கார்த்திக் மடக்கிப்பிடித்து மொபட்டை கைப்பற்றினார். அந்த சிறுமியிடம் கேட்டபோது அது தனது தந்தையின் மொபட் என்று கூறினாள். இதனால் சந்தேகம் அடைந்த கார்த்தி, அந்த சிறுமியை மணலி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சிறுமியை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி தனது தந்தை பெயர் சரவணன் (35) என்றும், ஆட்டோ டிரைவரான அவர் மணலி பாரதியார் நகர் பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று சரவணனை பிடித்து விசாரித்தனர்.
அப்போது சரவணன் மீது ஏற்கனவே பல திருட்டு வழக் குகள் இருப்பது தெரியவந்தது. அவர் நேற்று முன்தினம் இரவு மட்டும் சிவன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள் 4 பேரின் மோட்டார் சைக்கிள்களை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து சரவணனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story