திருவள்ளூர் அருகே பரிதாபம் செங்கல் சூளையில் சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு


திருவள்ளூர் அருகே பரிதாபம் செங்கல் சூளையில் சுவர் இடிந்து விழுந்து பெண் சாவு
x
தினத்தந்தி 7 March 2019 3:30 AM IST (Updated: 7 March 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே செங்கல் சூளையில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் பெண் ஒருவர் பலியானார். 2 பேர் காயம் அடைந்தனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கொத்தியம்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இதில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே உள்ள தோப்புராம்பட்டு கிராமத்தை சேர்ந்த மங்கை என்கின்ற மங்கையம்மாள் (வயது 60) மற்றும் அவரது உறவினர்களான செல்வி, சுமதி ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

3 பெண்களும் செங்கல்களை அறுக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மங்கையம்மாள், செல்வி, சுமதி ஆகிய 3 பேரும் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது செங்கல் சூளையின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து வேலை செய்து கொண்டிருந்த 3 பேர் மீதும் விழுந்தது. இதில் 3 பேரும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதில் மங்கையம்மாளின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. செல்வி, சுமதிக்கு காயம் ஏற்பட்டது.

இதைக்கண்ட அங்கிருந்த சக தொழிலாளர்கள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே மங்கையம்மாள் பரிதாபமாக இறந்து போனார். மேற்கண்ட 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Related Tags :
Next Story