பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது 16,262 மாணவ-மாணவிகள் எழுதினர்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. நேற்று நடைபெற்ற தமிழ் தேர்வினை 16,262 மாணவ, மாணவிகள் எழுதினர்.
பெரம்பலூர்,
மாணவ-மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு அரசு சார்பில் கடந்த ஆண்டு முதல் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பிளஸ்-1 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது.
அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 77 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நேற்று 31 தேர்வு மையங்களில் தமிழ் தேர்வு நடந்தது. அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் மற்றும் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 30 தேர்வு மையங்களில் தமிழ் தேர்வு நடந்தது.
இதையொட்டி மாணவ, மாணவிகள் காலை 8.30 மணியில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். அவர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறையினை ஆர்வத்துடன் பார்த்தனர்.
பின்னர் 9.30 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. பிரார்த்தனையை தொடர்ந்து தேர்வின்போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்து கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மாணவ, மாணவிகள் தேர்வறைக்கு செல்வதற்கு முன் ஆசிரியர்களிடம் வாழ்த்து பெற்றனர்.
பின்னர் 9.45 மணியளவில் தேர்வறைக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். சரியாக 10 மணிக்கு வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடைத்தாள் வழங்கியதும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பினர். 10.15 மணியளவில் மணிசத்தம் ஒலித்ததும் தேர்வினை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 3,886 மாணவர்களும், 4,070 மாணவிகளும் என 7,956 பேர் பிளஸ்-1 தமிழ் தேர்வினை எழுத தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 3,822 மாணவர்கள், 4,027 மாணவிகள் என 7,849 பேர் தமிழ் தேர்வினை எழுத வந்திருந்தனர். 64 மாணவர்களும், 43 மாணவிகளும் என 107 பேர் தேர்வு எழுத வரவில்லை.
அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 8,564 மாணவ, மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் 151 பேர் தேர்வு எழுத வராததால் 8,413 மாணவ, மாணவிகள் தமிழ் தேர்வினை எழுதினர். பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பிளஸ்-1 தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அந்தந்த மாவட்ட நிர்வாக வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டிருந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக 33 தலைமை ஆசிரியர்களும் மற்றும் 31 துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். பெரம்பலூர் கல்வி மாவட்டத்திற்கு தேர்வு மையத்திற்கு 9 வழித்தடங்களில் வினாத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல 9 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக 425 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள்களை பரிமாறிக்கொண்டு எழுதுதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க 60 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப் பட்டது.
இதேபோல அரியலூர் மாவட்ட தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக 52 தலைமை ஆசிரியர்களும் மற்றும் 52 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அரியலூர், உடையார்பாளையம் கல்வி மாவட்டங்களுக்கு தேர்வு மையத்திற்கு 9 வழித்தடங்களில் வினாத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல 9 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக 560 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வில் மாணவ, மாணவிகள் காப்பி அடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க 100 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு தேர்வு மையங்களை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதே போல் அரியலூர் மாவட்டத்தில் தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி ஆய்வு செய்தார்.
இந்த ஆண்டு முதல் பிளஸ்-1 அரசு பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடத்துக்கும் 100 மதிப்பெண்கள் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி 12.45 மணிக்கு முடிவடைந்தது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுத சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கேள்விக்கான பதிலை சொல்ல, சொல்ல அதை சிறப்பாசிரியர்கள் விடைத்தாளில் எழுதினர். அவர்களுக்கு மட்டும் கூடுதலாக 1 மணிநேரம் ஒதுக்கப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் திருப்திகரமாக தேர்வு எழுதிய மகிழ்ச்சியுடனேயே வெளியே வந்ததை பார்க்க முடிந்தது.
பழைய பிளஸ்-1 பாடத்திட்டத்தில் தனித்தேர்வர்களாக பெரம்பலூர் மாவட்டத்தில் 81 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 227 பேரும் எழுதினர். நாளை (வெள்ளிக்கிழமை) பிளஸ்-1 மாணவர்களுக்கு ஆங்கிலம் தேர்வு நடைபெற இருக்கிறது. பிளஸ்-1 தேர்வு வருகிற 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) கணிதம், வணிகவியல், சத்துணவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான தேர்வுகள் நடக்கிறது.

Related Tags :
Next Story