கடன் தொல்லையால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை
கடன் தொல்லையால் காஞ்சீபுரத்தில் கணவன்–மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 70). இவரது மனைவி வேண்டாம்மாள் (65). இவர்கள் இருவரும், வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்தநிலையில், கடன் தொல்லையால் குப்புசாமி, வேண்டாம்மாள் இருவரும் கடந்த 4–ந்தேதி விஷம் குடித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் வேண்டாம்மாள் பரிதாபமாக இறந்தார். நேற்று குப்புசாமி பரிதாபமாக இறந்தார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
இதுகுறித்து பெரிய காஞ்சீபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.