காஞ்சீபுரத்தில் வாலிபர் வெட்டிக்கொலை
காஞ்சீபுரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் பெரியார் நகர் அருகே தாட்டித்தோப்பு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் மதுசூதனன் (வயது 28). இவர் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாட்டித்தோப்பு என்ற இடத்தில் மதுசூதனன் வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரை மர்மநபர்கள் வழிமறித்து சரமாரியாக கத்தியால் வெட்டினர்.
உயிருக்கு போராடிய மதுசூதனனை உடனடியாக அங்கு இருந்தவர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதுசூதனன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story