பேரிடர் மேலாண்மை ஒத்திகை
எஸ்.புதூர் ஒன்றியம் செட்டிகுறிச்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் அவசரகால பேரிடர் மேலாண்மை ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
எஸ்.புதூர்,
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சென்னை முதல் கப்பலூர் வரை செல்லக்கூடிய பைப் லைன்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவசரகால ஒத்திகை நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் செட்டிகுறிச்சியில் ஒத்திகை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வட்டார போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரி, சிங்கம்புணரி தாசில்தார் கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
இதில் 3 கட்டமாக ஒத்திகை நடத்தப்பட்டது. அதில் முதலாவதாக பெட்ரோல் செல்லும் பைப் லைன்களில் கசிவு ஏற்பட்டால் அதனை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் திருச்சி மண்டல பொது மேலாளர் சவுராசியா மற்றும் மதுரை மண்டல முதன்மை செயல் மேலாளர் சீனிவாஸ் விளக்கி கூறினர்.
2-வதாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் தீ விபத்துக்களை கிளாஸ்-எ, கிளாஸ்-பி, கிளாஸ்-சி என பிரித்து அந்த வகையில் விபத்து ஏற்பட்டால், எவ்வாறு அந்த தீ விபத்தினை கையாள வேண்டும், எவ்வாறு அணைக்க வேண்டும் என்று செயல் முறை விளக்கத்துடன் எடுத்துக்கூறப்பட்டது.
3-வதாக காயம் அல்லது விபத்து ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி செய்வது குறித்து என்று மருத்துவத்துறை சார்பில் எடுத்துக்கூறப்பட்டது.
தொடர்ந்து அவசரகால உதவி மற்றும் கட்டணமில்லா தொலைபேசி சேவை குறித்து உலகம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜா எடுத்துக்கூறினார். முடிவில் செட்டிகுறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பள்ளி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை மண்டல பராமரிப்பு மேலாளர் கார்த்திக்குமார், மற்றும் துணை மேலாளர் சுந்தர் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story