வேட்பு மனுதாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


வேட்பு மனுதாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 7 March 2019 4:15 AM IST (Updated: 7 March 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி,வேட்பு மனு தாக்கல் தொடங்கும் 10 நாட்களுக்கு முன்பு வரைவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்என்று தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் கூறினார்.

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி,வேட்பு மனு தாக்கல் தொடங்கும் 10 நாட்களுக்கு முன்பு வரைவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்என்று தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் கூறினார்.

இதுபற்றி கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

5.03 கோடி வாக்காளர்கள்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கர்நாடகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மாநிலத்தில் மொத்தம் 5.03 லட்சம் வாக்காளர்கள் இருக்கின்றனர். அதன்பிறகும் பிப்ரவரி மாதம் இறுதி மற்றும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நடத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா? என்பதை சரிபார்க்க அறிவுரை கூறப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 1.50 கோடிக்கும் அதிக வாக்காளர்கள் இணையதள வசதியை பயன்படுத்துகிறார்கள். ஆனால் வெறும் 12 லட்சம் வாக்காளர்கள் தான் தங்களின் பெயர்களை ஆன்-லைன் மூலம் சரிபார்த்து உள்ளனர். வரும்நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்க்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்கள் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தங்களின் பெயர்களை சரிபார்த்து கொள்ளலாம்.

பெயர் சேர்க்க வாய்ப்பு

www.ceokarnataka.kar.nic.in என்ற இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்த்து கொள்ளலாம். மேலும் வேட்புமனு தாக்கலுக்கு இறுதி நாட்களுக்கு முந்தைய 10 நாட்கள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் முடிந்தவரை வாக்காளர்கள் முன்பாகவே பெயர் சேர்த்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது மட்டுமே வாக்களிப்பதற்கான உரிமையை பெற்று கொடுப்பதாக கருதமுடியாது.

வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்தால் தான் வாக்களிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story