நெல்லையில் வெயில் 100 டிகிரி தாண்டியது அனல் காற்று வீசியதால் மக்கள் அவதி


நெல்லையில் வெயில் 100 டிகிரி தாண்டியது அனல் காற்று வீசியதால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 6 March 2019 11:17 PM GMT (Updated: 2019-03-07T04:47:38+05:30)

நெல்லையில் நேற்று வெயில் 100 டிகிரியை தாண்டியது. அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.

நெல்லை,

தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக உள்ளது. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். தென் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்தது. மதியம் அனல் காற்று வீசியது. மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் முகத்தை மூடிச்சென்றனர். சாலையில் நடந்து சென்றவர்கள் குடை பிடித்தபடி சென்றனர். நெல்லையில் நேற்று 101 டிகிரியாக வெயில் பதிவானது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் குளிர்பானம் விற்பனை அமோகமாக உள்ளது. சாலையோரங்களில் புதிது, புதிதாக குளிர்பான கடைகள் தொடங்கி உள்ளன. இளநீர், தர்பூசணி, கரும்பு ஜூஸ், பழ ஜூஸ் விற்பனை அமோகமாக இருந்தது. தள்ளுவண்டி கடைகளில் கம்பங்கூழ், கேப்பைக் கூழ் ஆகியவைகளின் விற்பனையும் படுஜோராக இருந்தது. மாலை 4 மணி வரை சாலையில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. 

Next Story