மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் 21 நாட்கள் நடக்கிறது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 21 நாட்களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடக்கிறது.
கிருஷ்ணகிரி,
இது தொடர்பாக மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 2018-19-ம் ஆண்டில் 16-வது சுற்றில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பசுவினம் மற்றும் எருமையின கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 21 நாட்கள் தொடர்ந்து போடப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 67 ஆயிரத்து 600 பசு மற்றும் எருமையினங்களுக்கு இன்று முதல் வருகிற 28-ந் தேதி வரை 21 நாட்களுக்கு தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணி கால்நடை பராமரிப்புத்துறையினரால் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஒவ்வொரு கிராமத்திலும் அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவர் தலைமையிலான குழு முகாமிட்டு, கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி குழுவினரால் அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கன்றுகளுக்கு இன்று முதல் அந்தந்த கிராமங்களில் நடைபெறும் தடுப்பூசி போடும் முகாம்களுக்கு தங்களது கால்நடைகளை கொண்டு வந்து கோமாரி நோய் தடுப்பூசியை தவறாமல் போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story