சீர்காழி அருகே பரிதாபம்: மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்; பாலிடெக்னிக் மாணவர் பலி
சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் பாலிடெக்னிக் மாணவர் பலியானார்.
சீர்காழி,
தஞ்சை மாவட்டம் பந்த நல்லூர் அருகே மடத்துறை காலனி தெருவை சேர்ந்த வீரமணி மகன் பாலமுருகன்(வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை பாலமுருகன் மோட்டார் சைக்கிளில் பந்தநல்லூரில் இருந்து நாகை மாவட்டம் சீர்காழி அருகே புளிச்சக்காடு கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.
வைத்தீஸ்வரன்கோவில் அருகே நயினார்தோப்பு என்ற இடத்தில் சென்றபோது சீர்காழியில் இருந்து ஆடுதுறையை நோக்கி வந்த தனியார் கல்லூரி பஸ்சும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தலை நசுங்கி பாலமுருகன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
விபத்தின்போது கட்டுப்பாட்டை இழந்த கல்லூரி பஸ், அங்குள்ள ஒரு மரத்தில் மோதி நின்றது. இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பஸ் டிரைவர் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்தில் கல்லூரி பஸ் நொறுங்கியது. விபத்துகுறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன்கோவில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கல்லூரி பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த விபத்தால் சீர்காழி-மயிலாடுதுறை சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story