மீண்டும் இலவச அரிசி வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி கையெழுத்து இயக்கம்
மீண்டும் இலவச அரிசி வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சி கையெழுத்து இயக்கம் நடத்தியது.
காரைக்கால்,
காரைக்கால் பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், காரைக்காலில் நியாய விலைக்கடைகளை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் தொடங்கி வைத்து பேசினார். விவசாய தொழிலாளர் சங்க தேசிய துணைத்தலைவர் ராமமூர்த்தி, விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி அரசு மாதந்தோறும் மக்களுக்கு வழங்கி வந்த இலவச அரிசியை மீண்டும் தடையின்றி வழங்க வேண்டும், நியாய விலைக்கடைகளை முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலையை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலியாக ரூ.500 வழங்க வேண்டும். மத்திய அரசு அமல்படுத்திய ஜி.எஸ்.டி. வரியை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அப்போது அங்கு வைத்திருந்த பலகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும், பொதுமக்கள் பலரும் ஆதரவு தெரிவித்து கையெழுத்துகளை பதிவு செய்தனர். இதில் விவசாயத்தொழிலாளர் சங்க செயலாளர் குமார், இந்திய கம்யூனிஸ்டு வட்டத்துணை செயலாளர் பாலசுப்ரமணியன், வட்டப்பொறுப்பாளர் பக்கிரிசாமி உள்ளிட்ட கலந்து கொண்டு பேசினர்.
Related Tags :
Next Story