பிளஸ்-2 கணித தேர்வு கடினம் மாணவ-மாணவிகள் கருத்து
பிளஸ்-2 கணித தேர்வு கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் நேற்று பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு கணிதம், வணிகவியல், மைக்ரோ பயாலஜி, வேளாண்மை உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத 11,330 பேர் விண்ணப் பித்திருந்தனர். இதில் 10,730 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 600 பேர் தேர்வுக்கு வரவில்லை. இதில் கணித பாடத்தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்ததாக பரவலாக மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். அது பற்றிய விவரம் வருமாறு:-
கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ராகுல்:-
கடந்த ஆண்டை போல், 200 மதிப்பெண்களுக்கு கணித தேர்வு நடத்தப்படவில்லை. மாறாக 10 மதிப்பெண்கள் வகுப்பறை செயல்பாடுகளுக்கும், 90 மதிப்பெண்கள் எழுத்து தேர்வுக்கும் நிர்ணயிக்கப்பட்டது. எனவே 2½ மணி நேரம் அவகாசம் இருப்பதால் எளிதில் கணக்குகளை போட்டு மதிப்பெண்களை அள்ளிவிடலாம் என நினைத்தேன். ஆனால் வினாத்தாளை பார்த்த போது, அதில் கேட்கப்பட்டிருந்த வினாக்கள் சற்று கடினமாக இருந்தன. புத்தகத்தின் பயிற்சி வினாக்களில் இருந்து கேள்விகள் அதிகமாக வரவில்லை. மேலும் வினா கேட்டிருக்கிற விதமும் சற்று சிந்தித்து பார்த்து எழுதும் வகையில் தான் இருந்தது. 5 மதிப்பெண் வினாக்களை எழுத சிரமப்பட்டேன். எனவே இந்த ஆண்டு கணிதத்தில் 100-க்கு 100 வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
குழப்பும் வகையில் வினாக்கள்
கரூரை சேர்ந்த ஒரு தனியார் பள்ளி மாணவி ஜனனி:-
நான், முன்பு நடந்த அரசு பொதுத்தேர்வு கணித வினாக்களை முழுவதும் படித்து விட்டு சென்று எழுதினேன். ஆனால் அதில் இருந்து வினாக்கள் வராதது ஏமாற்றமாக இருந்தது. வகைக்கெழு சமன்பாடு உள்ளிட்டவை பற்றிய வினாக்கள் குழப்பும் வகையில் இருந்தன. மற்றபடி ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தன. 90-க்கு 25 மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி என்பதால், பெரும்பாலானோர் எளிதில் தேர்ச்சி பெற்று விடலாம் என்று தெரிவித்தார்.
குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி காவியா:-
நான் கணித தேர்வுக்கு நல்லமுறையில் படித்து மாதிரி கணக்குகள் போட்டு பார்த்து வந்திருந்தேன். இருப்பினும் நான் படித்து போட்டு பார்த்த கணக்குகள் போல சில கணக்குகள் மட்டுமே தேர்வில் வந்தது. ஒரு மார்க் மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டிருந்தது. இந்த கணக்குகளுக்கு விடையளிப்பதில் சிரமம் இருந்தது. மேலும் மற்ற கணக்குகளைவிட 2 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் கணக்குகள் ஓரளவு சுலபமாக இருந்ததால், அவற்றில் முழு மதிப்பெண்கள் கிடைக்கும். மொத்தத்தில் கணித தேர்வு சற்று கடினமாகவே இருந்தது என்றார்.
விடை எழுதுவதில் சிரமம்
குளித்தலையை சேர்ந்த அரசு பள்ளி மாணவி ஆர். கிருத்திகா:-
நான் படித்து பார்த்த கணக்குகள் பெரும்பாலும் வரவில்லை. 5 மதிப்பெண் கணக்குகளில் மட்டுமே நான் படித்த கணக்குகள் வந்திருந்தன. 2 மதிப்பெண் மற்றும் 3 மதிப்பெண் வினாக்கள் சற்று சுலபமாக வந்திருந்தது. கணக்குகள் பெரும்பாலும் நேரடியாக கேட்கப்படவில்லை. இதுபோன்ற வினாக்களுக்கு விடையளிப்பதில் சற்று சிரமம் இருந்தது. இருப்பினும் நல்லமுறையில் அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துள்ளேன் என்றார்.
லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கவுதமன்:-
அதிகமாக எதிர்பார்த்து குறிப்பிட்டு படித்து விட்டு சென்ற வினாக்கள் எதுவுமே கேட்கப்படவில்லை. இதனால் வினாத்தாளை பார்த்ததுமே அதிர்ச்சியாக இருந்தது. எனினும் கணித சூத்திரங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சிந்தித்து பார்த்து 5 மதிப்பெண் வினா உள்ளிட்டவற்றுக்கு விடை எழுதியுள்ளேன் என்றார்.

Related Tags :
Next Story