ரூ.500 கோடி பணிகளுக்கு 1 மணி நேரத்தில் ஒப்புதல் மாநகராட்சி வழங்கியது
மும்பை மாநகராட்சி ரூ.500 கோடி பணிகளுக்கு 1 மணி நேரத்தில் ஒப்புதல் அளித்து உள்ளது.
மும்பை,
மும்பை மாநகராட்சி ரூ.500 கோடி பணிகளுக்கு 1 மணி நேரத்தில் ஒப்புதல் அளித்து உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் தேதி வெளியான உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும்.
இதை கருத்தில் கொண்டு மராட்டிய மந்திரிசபை கடந்த செவ்வாய்கிழமையன்று 22 திட்டங்களுக்கு 2 மணி நேரத்தில் ஒப்புதல் வழங்கியது.
வழக்கமாக வாரத்திற்கு ஒருமுறை தான் மந்திரிசபை நடக்கும். ஆனால் இந்த வாரத்தில் 2-வது முறையாக மந்திரிசபை கூட்டம் இன்று (வெள்ளிக் கிழமை) நடைபெறுகிறது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என மந்திரி ஒருவர் தெரிவித்தார்.
ரூ.500 கோடி பணிகள்
இதற்கிடையே மும்பை மாநகராட்சியின் நிலைக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் மும்பை மாநகராட்சி சார்பில், நகரில் ரூ.500 கோடி செலவில் மேற்கொள்ளப்பட உள்ள 69 திட்டப்பணிகளுக்கு 1 மணி நேரத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இவற்றில் குறிப்பாக மழைக்காலத்துக்கு முன்னதாக சாக்கடைகளை தூர்வாருதல், சாலைகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளை சீரமைத்தல், மாநகராட்சி ஆஸ்பத்திரிகளுக்கு புதிய படுக்கைகள் வழங்குவது உள்ளிட்டவை அடங்கும்.
Related Tags :
Next Story