பூச்சி மருந்து அடித்த அறையில் தூங்கிய கல்லூரி கேண்டீன் ஊழியர்கள் 2 பேர் சாவு புனே அருகே பரிதாபம்
பூச்சி கொல்லி மருந்து அடித்த அறையில் தூங்கிய கல்லூரி கேண்டீன் ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
புனே,
பூச்சி கொல்லி மருந்து அடித்த அறையில் தூங்கிய கல்லூரி கேண்டீன் ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
பூச்சிகொல்லி மருந்து
ஜல்காவை சேர்ந்தவர் அஜய் பெல்டர்(வயது20). இவரும் புல்தானாவை சேர்ந்த ஆனந்த கேட்கர்(20) என்ற வாலிபரும் புனே தன்காவாடியில் உள்ள கல்லூரி கேண்டீனில் வேலை பார்த்து வந்தனர். இருவரும் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தனர்.
கடந்த 3-ந்தேதி இவர்கள் தங்கியிருந்த அறையில் பூச்சி கொல்லி மருந்து அடிக்கப்பட்டது. இதனால் அன்றைய தினம் இருவரும் நண்பரின் வீட்டிற்கு சென்று தங்கினார்கள். பின்னர் கடந்த 5-ந்தேதி கேண்டீனில் வேலை செய்து முடித்த பிறகு இரவு வழக்கம்போல தங்களது அறைக்கு சென்று தூங்கினார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வெகு நேரமாகியும் இருவரும் கேண்டீனிற்கு வரவில்லை. இதையடுத்து கேண்டீன் மேலாளர் வாலிபர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றார். அப்போது, அறை உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை தட்டிய போதும் இருவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
2 வாலிபர்கள் பலி
இதனால் சந்தேகமடைந்த அவர் அறையின் பின்பக்க ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அஜய் பெல்டர் மற்றும் ஆனந்த கேட்கர் பேச்சு, மூச்சு இன்றி அசைவற்று கிடந்தனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்தவர்கள் உதவியுடன் இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த பாரதி வித்யாபீத் போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தூங்கும்போது பூச்சிகொல்லி மருந்தின் நச்சுதன்மையை சுவாசித்ததன் காரணமாக 2 வாலிபர்களும் இறந்திருக்கக்கூடும் என போலீசார் கருதுகின்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story