18-ல் இருந்து 49-வது இடத்துக்கு தள்ளப்பட்டது தூய்மையான நகரங்கள் பட்டியலில் மும்பை பின்தங்கியது நவிமும்பை 7-வது இடத்துக்கு முன்னேறியது


18-ல் இருந்து 49-வது இடத்துக்கு தள்ளப்பட்டது தூய்மையான நகரங்கள் பட்டியலில் மும்பை பின்தங்கியது நவிமும்பை 7-வது இடத்துக்கு முன்னேறியது
x
தினத்தந்தி 8 March 2019 4:30 AM IST (Updated: 8 March 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

தூய்மையான நகரங்கள் பட்டியலில் மும்பை பின்னடைவை சந்தித்தது. நவிமும்பை 7-வது இடத்துக்கு முன்னேறியது.

மும்பை, 

தூய்மையான நகரங்கள் பட்டியலில் மும்பை பின்னடைவை சந்தித்தது. நவிமும்பை 7-வது இடத்துக்கு முன்னேறியது.

தூய்மையான நகரங்கள் பட்டியல்

மத்திய அரசு ஆண்டுதோறும் நாடுமுழுவதும் ஆய்வு மேற்கொண்டு தூய்மையான நகரங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் தூய்மையான நகரமாக தேர்வாகி உள்ளது. இதேபோல் தூய்மையான தலைநகராக போபால் தேர்வானது.

அதே நேரத்தில் இந்த பட்டியலில் மும்பைக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2018) நடத்தப்பட்ட ஆய்வில் மும்பை 18-வது இடத்தை பிடித்திருந்தது. இந்த ஆண்டு 49-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதேபோல் மும்பையை அடுத்த தானே நகரமும் 40-வது இடத்தில் இருந்து 57-வது இடத்திற்கு பின்தங்கியது.

முன்னேற்றம்

ஆனால் கடந்த ஆண்டு 9-வது இடத்தை பிடித்திருந்த நவிமும்பை நகரம் 7-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. மிரா-பயந்தர் 47-வது இடத்தில் இருந்து 27-வது இடத்துக்கும், வசாய்-விரார் பகுதி 61-வது இடத்தில் இருந்து 36-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளன.

பின்னடைவு குறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி கிரன் திகாவ்கர் கூறுகையில், “பல்வேறு காரணங்களால் மும்பை நகரால் தகுதியான இடத்தை பிடிக்க முடியவில்லை. மேலும் நகரத்தில் வாழும் மக்களிடமும் ஆய்வின் போது கருத்து கேட்கப்பட்டது. மக்களின் கருத்து கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டில் சாதகமாக அமையவில்லை. இதனால் மதிப்பெண் குறைந்துவிட்டது” என்றார்.

காரணம்

இதுகுறித்து கொலபா பகுதியை சேர்ந்த ரேனு கபூர் கூறுகையில், “ நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் துப்புறவு துறையின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது.

அரசு மருத்துவமனையின் மருத்துவக்கழிவுகள் முறையற்ற முறையில் சாலைகள் மற்றும் நடைபாதைகளில் வீசப்படுகின்றன. இதுதான் தூய்மையான நகரங்கள் பட்டியலில் மும்பை நகரம் பின்தங்கியதற்கு முக்கிய காரணம்” என்றார்.

Next Story