பிலிப்பைன்சில் குழந்தைகளை பெற்றோர் ‘அடிக்கலாம்’


பிலிப்பைன்சில் குழந்தைகளை பெற்றோர் ‘அடிக்கலாம்’
x
தினத்தந்தி 9 March 2019 4:00 AM IST (Updated: 8 March 2019 2:50 PM IST)
t-max-icont-min-icon

பிலிப்பைன்சில் குழந்தைகளை பெற்றோர் அடிப்பது குற்றமாகாது.

பிலிப்பைன்சில் பெற்றோர் தமது குழந்தைகளை அடிப்பதை குற்றமாகக் கருதும் புதிய சட்ட மசோதாவை அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே தனது சிறப்பு அதிகாரத்தால் தடுத்து நிறுத்தியுள்ளார்.

அந்த மசோதா நிறைவேறியிருந்தால், பெற்றோர் தமது குழந்தைகளைத் திட்டுவது, அடிப்பது, அவமரியாதை செய்வது எல்லாம் குற்றமாக ஆகியிருக்கும். ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.

மேற்கண்ட ‘குற்றத்தில்’ ஈடுபடும் பெற்றோர் அல்லது ஆசிரியர், கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருந்திருக்கும்.

மசோதா நிறைவேற்றப்படாத நிலையில், பெற்றோரும் ஆசிரியர்களும் குழந்தைகளை அடிப்பதற்குத் தடையில்லை.

குறிப்பிட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து தான் ஏன் கையெழுத்திடவில்லை என்று பிலிப்பைன்ஸ் நாடாளுமன்றத்தில் விளக்கிப் பேசிய அதிபர், ‘‘குழந்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கு அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதை வழக்கொழிந்து போன நடைமுறையாக மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன’’ என்றார்.

குற்றவியல் சட்டத்தின்படி தண்டிப்பதற்கான வயதுவரம்பையும் குறைக்க வேண்டும், அப்போதுதான் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக மேற்கொள்ள முடியும் என்றும் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே கூறினார்.

Next Story