நாகை மாவட்டத்தில் சாராயம் விற்ற 4 பெண்கள் உள்பட 8 பேர் கைது 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


நாகை மாவட்டத்தில் சாராயம் விற்ற 4 பெண்கள் உள்பட 8 பேர் கைது 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 March 2019 4:30 AM IST (Updated: 8 March 2019 10:12 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் சாராயம் விற்ற 4 பெண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாகப்பட்டினம், 

கீழ்வேளூர் மேலகாவாலக்குடி கருவைக்காட்டில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கருவைக்காட்டில் புதுச்சேரி மாநில சாராய விற்பனை செய்து கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நுகத்தூர் மேலத்தெருவை சேர்ந்த ராஜா (வயது 47), ஆந்தகுடி அறுபதாம்கட்டளையை சேர்ந்த தனசேகர் (47), மேலகாவலாக்குடியை சேர்ந்த கார்த்திக் (35), ராஜா (40) ஆகியோர் என்பதும், இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 400 லிட்டர் சாராய பாக்கெட்டுகளும், 2 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள கீழகாவாலகுடியை சேர்ந்த தவமணி மகன் சார்லஸ், தர்மராஜ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல நாகை வெளிப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது வெளிப்பாளையம் பகுதியில் சாராயம் விற்பனை செய்த வெளிப்பாளையம் தர்மகோவில் தெருவை சேர்ந்த ஒச்சம்மாள் (52), வடக்கு நல்லியான் தோட்டத்தை சேர்ந்த மற்றொரு ஒச்சம்மாள் (55), விஜயலட்சுமி (45), வண்டிப்பேட்டையை சேர்ந்த செல்லம்மாள் (55) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 300 லிட்டர் புதுச்சேரி மாநில சாராயம் பறிமுதல் செய்தனர்.

Next Story