வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.15¾ லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்
வலங்கைமான் மகாமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.15¾ லட்சம் வசூலானது.
வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் பிரசித்திப்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பாடைக்காவடி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த விழாவில் பக்தர்கள் பாடையில் படுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். உடல் நலம் பெற வேண்டும் என்ற வேண்டுதலுக்காக இந்த நேர்த்திக்கடன் பக்தர்களால் நிறைவேற்றப்படுகிறது.
வழக்கம்போல் இந்த ஆண்டுக்கான பாடைக்காவடி திருவிழா வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவில்களில் உள்ள நிரந்தர உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
அய்யப்பா சேவா சங்கத்தினர், தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் முன்னிலையில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணினர். இதில் காணிக்கையாக ரூ.15 லட்சத்து 81 ஆயிரத்து 376 வசூலானது. அதேபோல 285 கிராம் தங்கம், 505 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது.
Related Tags :
Next Story