நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனையை 50 ஆயிரம் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை தலைவர் என்.சின்னத்துரை தகவல்
நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனையை 50 ஆயிரம் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தலைவர் என்.சின்னத்துரை கூறினார்.
நெல்லை,
நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் ரூ.10-க்கு 100 மில்லி தயிர், ரூ.18-க்கு, 200 மில்லி தயிர், ரூ.6-க்கு 200 மில்லி மசாலா மோர் ஆகியவை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை தொடக்கவிழா நேற்று பாளையங்கோட்டை ஆவீன் நிறுவனத்தில் நடந்தது. இந்த விற்பனையை தலைவர் என்.சின்னத்துரை தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ஆவின் நிறுவனத்தின் மூலம் தினமும் 60 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் 46 ஆயிரத்து 100 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பால் விற்பனையை 50 ஆயிரம் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரூ.10-க்கு நிறை கொழுப்பு கொண்ட ஆவின் பால் மற்றும் ஓட்டல் ஸ்பெஷல் பால் ஆகியவற்றை கடந்த மாதம் அறிமுகம் செய்து உள்ளோம். இதன் தொடச்சியாக தற்போது தயிர், மசலா மோர் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆவின் மூலம் பால் உப பொருட்களான நெய், வெண்ணெய், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்றவைகள் தினமும் சராசரியாக ரூ.3½ லட்சத்திற்கு விற்பனையாகிறது. மாடுகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் துணைதலைவர் கணபதி, பொதுமேலாளர்(பொறுப்பு) டாக்டர் அருணகிரிநாதன், உதவி பொதுமேலாளர்கள் சாந்தி, ஜான்சுனில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ரெட்டியார்பட்டி ஆவின் பாலகத்தின் வாசல் முன்பு அண்ணா தொழிற்சங்க கொடியேற்று விழா நடந்தது, இதில் ஆவின் தலைவர் சின்னத்துரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடியேற்றி இனிப்பு வழங்கினார்.
Related Tags :
Next Story