கோவில்பட்டி அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 15 மாணவ-மாணவிகள் காயம்
கோவில்பட்டி அருகே பள்ளிக்கூட வேன் கவிழ்ந்து 15 மாணவ- மாணவிகள் காயம் அடைந்தனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே வானரமுட்டியில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு நேற்று மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும், வழக்கம்போல் மாணவ-மாணவிகளை பள்ளிக்கூட வேனில் ஏற்றி அவர்களது வீடுகளுக்கு அழைத்து சென்றனர். திருமங்கலகுறிச்சியைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 30) வேனை ஓட்டிச் சென்றார்.
கோவில்பட்டி அருகே குமரெட்டியாபுரம் பகுதியில் சென்றபோது, அங்குள்ள மயானத்தின் தடுப்பு சுவரில் வேன் எதிர்பாராதவிதமாக மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 10 மாணவர்கள், 5 மாணவிகள் மற்றும் ஆசிரியை மகேசுவரி (31) ஆகியோர் காயம் அடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, அவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் படுகாயம் அடைந்த 2 மாணவர்கள், ஆசிரியை மகேசுவரி ஆகியோர் கோவில்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மற்றவர்களை சிகிச்சைக்கு பின்னர் பெற்றோர்கள் அழைத்து சென்றனர்.
இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story